Select Page

ஆஞ்சநேயர் காக்கட்டும்

ஆஞ்சநேயர் காக்கட்டும்

என்னால் மறக்கவே முடியவில்லை. ஒருமுறை யாகூ வலைதளத்தில் ஒரு வெளிநாட்டுக்காரர், உங்கள் Monkey God பற்றி கூறுங்களேன் என்று கேட்டதற்கு ஒரு பிராமணர், ஆஞ்சநேயர் பழங்குடி இனத்தவர் என்று கூறாமல் , ஒருமுறை ஒரு பிராமணர் தவறு செய்ததால் வேறு ஒரு பிராமணரின் சாபத்திற்கு ஆளாகி குரங்காகப் பிறந்தார் – என்று ஆரம்பித்து ஆஞ்சநேயரைப் பற்றி பதிவிட்டார். அதாவது ஆஞ்சநேயர் பிரபலமான கடவுள் என்பதனால் அதனுடைய பெருமை பழங்குடி இனத்தவருக்கு செல்லாமல் அதை பிராமண இனத்திற்கு மடை மாறிய செயல் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இப்போதாக இருந்தால் அதிர்ச்சியடைந்திருக்கமாட்டேன். அப்போது அவ்வளவாக பிராமண சூழ்ச்சிகள் தெரியாது என்பதால் அதிர்ச்சியாக இருந்தது. வெறி பிடித்த பிராமணர்களின் விளக்கப் பிடியிலிருந்து சமுதாயம் மீண்டு எழ , எனக்கு நேரிலே இருமுறை இராம நாம பசனைகளை சொல்லித்தந்தவரும், மேலும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் என்னிடம் நேரிடையாகப் பேசி வழிநடத்திவருபவருமான அந்த ஆஞ்சநேயப் பெருமான் அருள் செய்வாராக !
                                                 ஓம்
                                                                        – தாசர் சுவாமி

More From This Category

Be proud to be a
Non-Brahmin
Copyright © 2024dasarswami.com