Select Page

உலகை ஏமாற்றும் அறிவாளி

உலகை ஏமாற்றும் அறிவாளி

ஆகாயத்தில் சிறகடித்துப் பறக்க வேண்டிய அறிவாளிகள் இந்த முட்டாளின் மரக்கிளையில் வந்து அமர்ந்துள்ள காரணம் என்ன? என்று கேட்டான் காளிதாசன்.

எப்படிப்பட்ட அறிவாளிக்கும் ஓய்வெடுக்க சிறிது முட்டாள்தனம் தேவைப்படுகிறது என்று உணர்ந்தனர் அறிவாளிகள்.

முட்டாள் ஆனால்தான் காளிதாசன் ஆக முடியும் என்று திருந்தி வந்துள்ளதாகவும் தங்களை முட்டாள்களாக்கும்படியும் காளிதாசனிடம் கேட்டுக்கொண்டனர் அறிவாளிகள்.

முட்டாளை அறிவு சொல்லிக் கொடுத்து அறிவாளியாக்கலாம். ஆனால் அறிவாளியை எப்படி முட்டாளாக்க முடியும்? இதுகூடத் தெரியாதா முட்டாள் அறிவாளிகளே என்றான் காளிதாசன்.

தாங்கள் முட்டாள்களா அறிவாளிகளா என்று குழப்பம் வந்துவிட்டது அறிவாளிகளுக்கு. அதையும் காளிதாசனிடமே கேட்டுவைத்தனர்.

குழப்பம் முட்டாள்களுக்குத்தானே வரும் , அறிவாளிகளுக்கு எப்படி வரும் ? – என்று கேட்டான் காளிதாசன்.

அப்படியானால் நாங்கள் அறிவாளிகளா முட்டாள்களா என்ற குழப்பம் வந்துவிட்டதால் நாங்கள் முட்டாள்களே என்றனர் அறிவாளிகள்.

சந்தோசம்

நீங்கள் கேட்டுக்கொண்டபடியே உங்களை முட்டாளாக்கிவிட்டேன், போய்வாருங்கள் என்றான் காளிதாசன்.

மகிழ்ச்சியோடு அவர்கள் கிளம்பும்போது, ‘ நீங்கள் முட்டாள்களே என்ற தெளிவு உங்களுக்கு வந்துவிட்ட பிறகு குழப்பம் இல்லாத நீங்கள் எப்படி முட்டாளாய் இருக்க முடியும்? ‘ – என்று மீண்டும் அவர்களைக் குழப்பினான் காளிதாசன்.

ஐயோ எங்களை விட்டுவிடு. இப்படிப் போட்டுக் குழப்புகிறாயே. நாங்கள் அறிவாளிகளாகவே இருந்துவிட்டுப் போகிறோம் என்று ஓடினார்கள் அறிவாளிகள்.

குழம்பிப்போய் ஓடும் அறிவாளிகளே! போய்வாருங்கள் முட்டாள்களே! – என்று அனுப்பிவைத்தான் காளிதாசன்.

முட்டாள்களான அறிவாளிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டே நடந்தனர்,’ உலகை ஏமாற்றும் அறிவாளியைவிட ஏமாற்றாத முட்டாளே மேல்.’ என்றனர்.

திடீரென்று அதில் ஒருவனுக்கு அறிவு மீண்டும் வேலை செய்தது. அவன் கேட்டான்…..

அப்படியானால் உலகை ஏமாற்றாத அறிவாளி ?’

                                                                                                                                           –தாசர்

More From This Category

Be proud to be a
Non-Brahmin
Copyright © 2024dasarswami.com