புளுவர்களே !
புலவர்களே என்று சொல்ல வராத காளிதாசன்
காளிதாசன் ஒருமுறை காளி கோவிலில் அமர்ந்துகொண்டு முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருந்தான். பண்டிதர்கள் சாமி கும்பிடுவதுபோல் வந்து கோவிலை சுற்றிக்கொண்டே அவனது முட்டாள்தனமான பேச்சைக் கேட்டு ரசிப்பது வழக்கம்.
‘ இந்த முட்டாள் பேச்சை ஒளிந்திருந்து கேட்பதற்கே வரானுவ.’ , என்றான் காளிதாசன்.
அதைக் கேட்ட பண்டிதர் ஒருவருக்கு பயங்கரமாக கோபம் வந்துவிட்டது. ‘ நான் ஒன்றும் நீ பேசுவதைக் கேட்க வரவில்லை.’ , என்றார்.
‘ இப்பொழுது எப்படி கேட்டாய்?’, என்றான்.
‘நான் சாமி கும்பிடும்போது நீ பேசுகிறாய்.’, என்றார்.
‘ஆமாம் ஆமாம் , என்று ஒளிந்திருந்த பண்டிதர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
‘இவ்வளவு புளுவர்கள் சொல்லும்போது அது உண்மையாகத்தான் இருக்கும்.’, என்றான் காளிதாசன்.
பண்டிதர் என்றால் புலவர் என்றனர். காளிதாசனால் எவ்வளவு முயன்றும் புளுவர்களே என்றுதான் அழைக்க முடிந்ததே தவிர பண்டிதர்கள் எவ்வளவு முயன்றும் புலவர்களே என்று சொல்லவைக்க முடியவில்லை.
பண்டிதர்கள் கேலியாக சிரித்தனர்.
ஏதோ காளிதாசன் ஒருவனாவது நமது உண்மையான பெயரில் நம்ம அழைத்துவிட்டுப் போகட்டுமே என்று முணுமுணுத்தான் ஒரு புளுவன்.
‘ நான் எட்டாயிரம் நூல்கள் படித்திருக்கிறேன் . என்னோடு பேசுவதற்குக்கூட உனக்கு தகுதியில்லை சீச்சீ சீ.’ , என்றாள் ஒரு பண்டிதனின் மனைவி.
‘வணக்கம் புளுவச்சீ!’ , என்றான் காளிதாசன்.
புலவச்சி என்று அவனுக்கு சொல்லவராது என்று மற்ற பண்டிதர்கள் அவளை சமாதானப்படுத்தினர்.
‘எனக்கு காளி போதும். நீ படித்த நூல்களை வைத்து எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை.’, என்றான் காளிதாசன்.
‘நீ காளி அருள் பெற்றவன் என்பதை எங்களுக்கு நிரூபிக்க வேண்டும் .’, என்றனர் பண்டிதர்கள்.
‘புளுவர்களுக்குப் போய் உண்மையை எப்படி நிரூபிப்பது ?’, என்றான்.
‘ புலவன் என்று அவனுக்கு சொல்ல வராது .’, என்று வந்த கோபத்தை மீண்டும் அடக்கிக்கொண்டனர்.
‘வேண்டுமானால் நீ வைத்திருக்கும் ஓலைக்கட்டிலிருந்து ஏதாவது ஒரு பக்கத்தை பிரித்துப் படி. காளி எனக்கு அதில் செயம் வைத்திருப்பாள்.’, என்றான் .
புளுவச்சீ படித்தாள்!
எண்ணாயிரம் கோடி யோகம் இருந்தாலும்
கண்ணாரமுதனைக் கண்டவரில்லை
உள்நாடி நின்று ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போல கலந்திருந்தானே
– என்று திருமூலரின் மந்திரம் வந்தது.
காளிதாசன் சிரித்தான். எட்டாயிம் கோடி யோகம் இருந்தாலும்கூட காளியை தெரிஞ்சிக்க முடியாது. நீ எப்படி தாயே எட்டாயிரம் புத்தகம் படிச்சிட்டு காளிய தெரியாம இவ்ளோ அலட்டிக்கிற.’, என்றான்.
பண்டிதர்கள் மௌனமாயினர்.
‘ இந்த முட்டாள் பேசுவதை ஒளிந்திருந்து கேட்கும் புளுவர்களே , போய் வருகிறேன். அனைவருக்கும் எனது பொங் கல் வாழ்த்துக்கள்.’, என்றான்.
‘அது என்ன பொங்கல் எல்லாம் முடிந்து பொங்கல் வாழ்த்து சொல்லுகிறாய்? அதுவும் பொங் கல் என்று பிரிக்கிறாய்.’, என்றனர்.
‘ அது ஒன்றுமில்லை உங்க வீட்டு அம்மணிங்க அரிசி சரியா களையல.’, என்றான்.
அப்பொழுதுதான் பார்த்தனர், அவர்கள் காளிக்கு படைத்த சர்க்கரைப் பொங்கலெல்லாம் காணாமல் போயிருந்தது.
‘நீங்கள் ஓலைக்கட்டைப் பிரிக்கிற நேரம் நான் அதையெல்லாம் சாப்பிட்டுவிட்டேன்.’, என்றான்.
‘நீங்களெல்லாம் வீட்டிற்குச் சென்று விதவிதமாக எப்படி சமைப்பது என்று அலசி ஆராய்ந்து சமைத்து எடுத்து வாருங்கள். எனக்கு விவரணங்கள் தேவையில்லை. பசிக்கு நல்ல சர்க்கரைப் பொங்கல் கிடைத்தால் அது போதும் .’, என்றான்.
‘அப்பொழுதும் நாங்கள் சமைப்பதைத்தானே நீ பிடுங்கித் தின்கிறாய் .’, என்றனர்.
‘சமைத்ததை வீட்டிலே சாப்பிடாமல் கோவிலுக்கு எடுத்து வந்து படைத்துவிட்டும் சாப்பிடாமல் ஒளிந்திருந்து என்னை ஒட்டுக்கேட்பானேன். கட்டணமாக நான் அதை எடுத்து சாப்பிடுவானேன்.’, என்றான்.
‘போய் வருகிறேன் புளுவர்களே புளுவச்சியே.’, என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
போகும்போது தன் சகாக்களுடன் அவன் பேசிக்கொண்டு செல்வது பண்டிதர்கள் காதிலும் விழுந்தது.
‘அது சரி சகா, அன்னைக்கு ஒரு புளுவர் கீதையிலிருந்து ஒரு சுலோகம் படித்துக் காட்டினாரே அது ஒனக்கு ஞாபகம் இருக்கா?’, என்று கேட்டான் காளிதாசன்.
‘ ம் இருக்கு. ஊரெங்கும் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்போது சிறு குட்டை எந்த அளவிற்கு பயன்படுமோ , இழைவனை உணர்ந்தவனுக்கு சாத்திரங்கள் அந்த அளவிற்குத்தான் பயன்படும்.’,
‘எட்டாயிரம் புத்தகம் படித்தும் இந்த வரி ஏனோ அந்த மர மண்டைக்கு ஏறவில்லை. ஒரு வேளை எண்ணிக்கைக் காட்ட படித்திருப்பாளோ அந்த புளுவச்சீ.’, என்றான் காளிதாசன்.
‘அது சரி காளிதாசா! உனக்கு உண்மையிலேயே புலவர்களை புலவர்கள் என்று சொல்ல வராதா?’ என்று கேட்டான் சகா.
‘ ஊ ஹூம் வராது. ஆனால் புளுவர்களை புளுவர்களே என்று சொல்ல வரும்.’, என்றான் காளிதாசன் தன் சகாவிடம்.
தூரத்திலிருந்த பண்டிதர்கள் காதில் இது விழுந்தது. அவர்கள் காளிதாசனை அடிக்க துரத்திச் சென்றனர்.
‘ஓடு ஓடு.’, என்று தன் சகாக்களோடு அன்று தப்பித்து ஓடியவன்தான், இன்றும் பண்டிதர்களைப் பார்த்தால் பயப்படுவதும் அவர்களது புளுகு மூட்டைகளைப் பார்த்து பயந்து ஓடுவதுமாக இருக்கிறான் மகா கவி காளிதாசன்.
ஓம்
– தாசர்
Written by dasarswami
More From This Category
இன்பதுன்பங்கள் அனைவர்க்கும் பொது
இழைவனை நாடி நில்லுங்கள் ...
இன்பதுன்பங்கள் அனைவர்க்கும் பொது
இழைவனை நாடி நில்லுங்கள் ...
இன்பதுன்பங்கள் அனைவர்க்கும் பொது
இழைவனை நாடி நில்லுங்கள் ...